Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் விஜயின் குஷி பட கூட்டணி!

மீண்டும் இணையும் விஜயின் குஷி பட கூட்டணி!

-

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதை தொடர்ந்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கவுள்ளார்.

மேலும் எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தமன்னா, கிரித்தி ஷெட்டி, பிரியா பவானி சங்கர், உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ‘மாநாடு’ படத்தை போலவே அரசியல் கதைக்களத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் பான் இந்திய அளவில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு ‘CSK’ என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

இந்த படம் தொடர்பான தகவல்கள் வருகின்ற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த படம் குறித்த சில தகவல்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் முன்பே சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.

அந்த வகையில் தற்போது தளபதி 68 படத்தில் ஜோதிகா இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

குஷி, திருமலை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு விஜய் ஜோதிகா கூட்டணி தற்போது 20 ஆண்டுகள் கழித்து விஜயின் தளபதி 68ல், இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ