ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆர்ஆர்ஆர்‘ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்திற்கு பெரும் எதிபார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஷைப் அலி கான் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகிறது.
ஜூனியர் என் டி ஆர் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் -ன் பிறந்தநாளான மே 20 அன்று படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘தேவரா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. பான் இந்தியா அளவில் உருவாக இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.