- Advertisement -
தேவரா திரைப்படத்திலிருந்து முதல் வீடியோ வெளியாகும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கொரட்ட சிவாவுடன் தேவரா என்ற திரைப்படத்தில் இணைந்துள்ளார். ஆச்சார்யா படத்தை இயக்கியவர் இவர் ஆவார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். அத்துடன் பிரபல பாலிவுட் நடிகர் சாயிஃப் அலிகான் இதில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.



