மீண்டும் ஒரு பாலிவுட் படத்தின் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் ஆர்ஆர்ஆர்(RRR) படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் விருதும் படத்தின் நடிகர்கள் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்நிலையில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகும் வார் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்னரே படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
பாலிவுட்டில் ‘The Immortal Ashwaththama’ என்ற பெயரில் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான கடைசி 3 திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. இதற்கிடையில் தென்னிந்திய படங்கள் இந்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் தென்னிந்தியாவிலிருந்து ஒரு நடிகரை ஹீரோவாக நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும் ஜூனியர் என்டிஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காக அணுகியதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இணைந்தால் அவர் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிடுவார்.