Homeசெய்திகள்சினிமாஇரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.... 'தேவரா' படத்தின் ரிலீஸ் எப்போது?

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?

-

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.... 'தேவரா' படத்தின் ரிலீஸ் எப்போது?தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தார். ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரின் கூட்டணியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது.

இதைத்தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை கொரட்டலா சிவா இயக்குகிறார். நந்தமுடி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் யுவசுதா ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர், சைப் அலிகான், ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ், கலையரசன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.... 'தேவரா' படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தேவரா படத்தின் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. அதன்படி இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 2024 ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதே சமயம் இப்படத்தை 2024 ஏப்ரல் 5ம் தேதி
வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ