spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தானம்!

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தானம்!

-

- Advertisement -

ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த நடிகர் சந்தானம்!நடிகர் சந்தானம் தொடக்கத்தில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் பணியாற்றியவர். அந்த வகையில் அஜித், விஜய், தனுஷ், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். மேலும் ஆர்யா, ஜீவா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, டகால்டி போன்ற படங்களை ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றனர்.அதிலும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இடையிடையில் ஒரு சில படங்கள் சந்தானத்திற்கு தோல்வி படங்களாக அமைந்தாலும், அந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். டைமிங் காமெடியில் அனைவரையும் கலாய்த்து தள்ளிவிடுவார். அந்த வகையில் நடிகர் சந்தானம் காமெடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

we-r-hiring

கடைசியாக சந்தானம் கிக், 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மன்னவன் வந்தானடி போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ