spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநான் நடிக்காமல் இருந்ததற்கு மாமனார் காரணமில்லை - ஜோதிகா விளக்கம்

நான் நடிக்காமல் இருந்ததற்கு மாமனார் காரணமில்லை – ஜோதிகா விளக்கம்

-

- Advertisement -
தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜோதிகா, நடிகர் சூர்யாவின் மனைவி. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் பேனரில் தயாரிப்பாளராகவும் உள்ளார். ஜோதிகா தனது திருமணத்தைத் தொடர்ந்து தனது சினிமா வாழ்க்கையில் ஒரு இடைவெளி எடுத்தாலும், அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிய திரையில் மீண்டும் வந்தார். மேலும் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே, என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்தும் கோலிவுட்டில் விட்ட கொடியை மீண்டும் பிடித்தார். அண்மையில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காதல் தி கோர். மலையாளத்தில் மம்மூட்டி ஜோதிகா நடிப்பில் உருவான இத்திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் போனதற்கு தனது மாமனார் சிவக்குமார் காரணமில்லை என்று ஜோதிகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதற்காகக்தான் திருமணத்திற்கு பிறகு நடிக்கவில்லை. இது நான் எடுத்த முடிவுதான். இதற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி தவறாக எடுத்துக் கொண்டார்கள். நான் மீண்டும் நடிக்க வந்ததற்கும் மாமனார் உறுதுணையாக இருந்தார் என ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ