spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம்ரவி - நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை.... முதல் தோற்றம் ரிலீஸ்....

ஜெயம்ரவி – நித்யா மேனன் நடிப்பில் காதலிக்க நேரமில்லை…. முதல் தோற்றம் ரிலீஸ்….

-

- Advertisement -

ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் காதலிக்க நேரமில்லை என்ற புதிய படத்தின் முதல் தோற்றம் வௌியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் ஒப்பந்தமாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் இறைவன். ஐ. அகமது இயக்கிய இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.

we-r-hiring
அதே சமயம் ஜெயம் ரவி தனது 30வது படமான ப்ரதர் எனும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம் ராஜேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். ஜெயம்ரவிக்கு சகோதரியாக பூமிகா சாவ்லா நடிக்கிறார். மேலும் நட்டி நடராஜன், கூல் சுரேஷ், விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதனிடையே தற்போது சைரன் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இப்படத்தில், கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமுத்திரக்கனி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோரும் படத்தில் இருக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம்ரவி மற்றும் நித்யா மேனன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படத்திற்கு காதலிக்க நேரமில்லை என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி உள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். படம் தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ