- Advertisement -
தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாடப் பட இருந்த கலைஞர் 100 விழா, கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணாக ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் நடப்பு ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பிலும், திமுக சார்பிலும் பல விதமான சிறப்பு நிகழ்ச்சிகளும், கூட்டங்களும் நடைபெற்றன. தமிழக அரசு சார்பிலும் நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவைத் தமிழ்த் திரையுலகம் சார்பிலும் கொண்டாட ஏற்கனவே திட்டமிடப்பட்டது. இதற்கான பிரமாண்ட விழா அடுத்த மாதம் சென்னையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்து வருகின்றனர்.



