நடிகை சாய் பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைமாமணி விருது என்பது இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டும் விதமாக வழங்கப்படுகிறது. அதன்படி தமிழக அரசு கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்திருக்கிறது. ரசிகர்களின் ஃபேவரைட் பிரபலங்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. தற்போது கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருப்பவர்களின் பெயர் பட்டியலை பார்க்கலாம்.

2021 ஆம் ஆண்டிற்கான விருதுகள் சாய் பல்லவி, எஸ்.ஜே. சூர்யா, இயக்குனர் லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், சின்னத்திரை நடிகர் கமலேஷ், திரைப்பட அரங்க அமைப்பாளர் ஜே.கே என்ற எம். ஜெயக்குமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2022 ஆம் ஆண்டுக்கான விருதுகள் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா வி.சி. குகநாதன், பாடலாசிரியர் விவேகா, செய்தி தொடர்பாளர் டைமண்ட் பாபு, புகைப்படக் கலைஞர் லட்சுமி காந்தன், சின்னத்திரை நடிகை மெட்டி ஒலி காயத்ரி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள், நடிகர் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், அனிருத், சாண்டி மாஸ்டர், பாடகி ஸ்வேதா மோகன், செய்தி தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விருதினை விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.