spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவருங்கால மனைவியை அறிமுகப்படுத்திய காளிதாஸ்... வாழ்த்து கூறிய மோகன்லால்...

வருங்கால மனைவியை அறிமுகப்படுத்திய காளிதாஸ்… வாழ்த்து கூறிய மோகன்லால்…

-

- Advertisement -
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஜெயராம். தனது தனித்துவமான நடிப்பால் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் ஜெயராம் கடந்த 2020 ஆம் ஆண்டு ‘மகள்’ என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் மணிரத்தினம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

we-r-hiring
இவரது மகன் காளிதாஸ் ஜெயராம்.இவர் மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் அவர் கமலுக்கு மகனாக நடித்திருப்பார். இறுதியாக காளிதாஸ் மற்றும் அர்ஜூன் தாஸ் நடிப்பில் போர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே இவர் மாடல் அழகியான தாரிணி காளிங்கராயர் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களுக்கு, அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விரைவில் காளிதாஸ் மற்றும் தாரிணியின் திருமணமும் நடைபெற உள்ளது. இந்நிலையில், தனது சகோதரி திருமணத்தில் கலந்து கொண்ட தனது காதலியை, அழைத்து வந்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் காளிதாஸ் ஜெயராம். மோகன்லாலும், புது ஜோடியை வாழ்த்திச் சென்றார்.

MUST READ