Homeசெய்திகள்சினிமாகல்கி பட அதிநவீன கார் அறிமுக விழா... பிரபாஸை காண திரண்ட கூட்டம்...

கல்கி பட அதிநவீன கார் அறிமுக விழா… பிரபாஸை காண திரண்ட கூட்டம்…

-

சலார் திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ப்ராஜெக்ட் கே. அதாவது கல்கி 2898 AD.இப்படம் இந்திய திரை உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதாணி, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

https://x.com/i/status/1793561252901609685

வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் பைரவா என்ற கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். படத்தில் புஜ்ஜி ரோபோ எனும் கதாபாத்திரமும் இணைந்துள்ளது. இதற்கு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்துள்ளார். மேலும், படத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

https://x.com/i/status/1793489476024733975

இதன் அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அப்போது நடிகர் பிரபாஸ் அந்த காரை ஓட்டிக் கொண்டபடியே அரங்கில் நுழைந்தார். அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது திரைப்படம் குறித்து பேசிய நடிகர் பிரபாஸ் கமல்ஹாசனுடன் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், சிறுவயதிலேயே அவரால் ஈர்க்கப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

MUST READ