Homeசெய்திகள்சினிமா5 நாட்களில் 500 கோடியை தாண்டிய கல்கி 2898AD... அடித்து தூள் கிளப்பும் திரைப்படம்... 5 நாட்களில் 500 கோடியை தாண்டிய கல்கி 2898AD… அடித்து தூள் கிளப்பும் திரைப்படம்…
- Advertisement -

இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 27-ம் தேதி வெளியான பிரம்மாண்ட திரைப்படம் கல்கி 2898 AD. பிரபல தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் பான் இந்தியா நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு வில்லனாக கமல்ஹாசனும், ஜோடியாக தீபிகா படுகோனும் நடித்துள்ளனர். இது தவிர திஷா பதானி, பசுபதி, அன்னா பென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். பிரபல தெலுங்கு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. உலகம் முழுவதும் கல்கி திரைப்படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. படம் வெளியான முதல் நாளில் இருந்து, நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், கல்கி திரைப்படம் வெளியான 5 நாட்களில் சுமார் 555 கோடி ரூபாய் வசூல் ஈட்டி பெரும் சாதனையை படைத்து வருகிறது. சுமார் 10 நாட்களிலேயே ஆயிரம் கோடி ரூபாயை கல்கி திரைப்படம் கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.