spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபுரமோசனை தீவிரப்படுத்தியது கல்கி குழு... நட்சத்திரங்களின் வீடுகளுக்கு பரிசுப்பெட்டி...

புரமோசனை தீவிரப்படுத்தியது கல்கி குழு… நட்சத்திரங்களின் வீடுகளுக்கு பரிசுப்பெட்டி…

-

- Advertisement -

 

ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில், பாகுபலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தார் பிரபாஸ். பாகுபலி படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்த சாஹோ, ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சலார். இத்திரைப்படத்தை அடுத்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898 AD.இப்படம் இந்திய திரை உலகில் மாபெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

we-r-hiring

 

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வை ஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

இத்திரைப்படம் மே மாதமே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், பின்னணி வேலைகளில் ஏற்பட்ட தாமதத்தால் பட வெளியீட்டில் இழுபறி ஏற்பட்டது. இந்நிலையில், கல்கி திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 27-ம் தேதி கல்கி திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

MUST READ