- Advertisement -
ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் கள்வன் படத்தின் முக்கிய அப்டேட் நாளை வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன்
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களிலும் நடத்து வருகிறார். இவரது நடப்பில் வெளியான பேச்சுலர், ஜெயில் ஆகிய படங்கள் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆக்சஸ் பிலிம் பேக்டரி இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் கடந்த ஆண்டு வெளியாகி 80 லட்சம் பார்வையாளர்களை கடந்தது. இத்திரைப்படத்தின் வெளியீட்டு தேதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால், படத்தின் உரிமையை விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
#Kalvan Movie Special Announcement Tomorrow @ 6.45 PM
Direction : PV Shankar
Starring : GV Prakash, Ivana, Bharathiraja, Dheena
Music : GV Prakash
Production Company : Axess Film Factorypic.twitter.com/QjKugjHPC0— Trendswood (@Trendswoodcom) March 10, 2024