- Advertisement -
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் திரை வாழ்வில் கள்வன் திரைப்படம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று படத்தின் இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல முகங்களாக கலக்கிக் கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக தன் பயணத்தை தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ். விஜய், அஜித், விக்ரம், கார்த்தி,சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கும் அவர் இசை அமைத்துள்ளார். கிட்டத்தட்ட 100 திரைப்படங்களுக்கு அவர் இசை அமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
