Homeசெய்திகள்சினிமாமணப்பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன்.... ஏற்கனவே திருமணமான நடிகரை கரம்பிடித்தாரா?

மணப்பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன்…. ஏற்கனவே திருமணமான நடிகரை கரம்பிடித்தாரா?

-

பிரபல நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருபவர். இவர் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேகரித்து வைத்துள்ளார். மணப்பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன்.... ஏற்கனவே திருமணமான நடிகரை கரம்பிடித்தாரா?அந்த வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை வென்றிருக்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அடுத்தது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் திடீரென திருமணம் செய்து கொண்டதாக அதுவும் ஏற்கனவே திருமணமான நடிகரை திருமணம் செய்து கொண்டதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.மணப்பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன்.... ஏற்கனவே திருமணமான நடிகரை கரம்பிடித்தாரா? அதாவது மலையாளத்தில் சின்னத்திரை நடிகர் ஸ்ரீராம் ராமச்சந்திரனை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் ஸ்ரீராம் ராமச்சந்திரனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன், ஸ்ரீராம் ராமச்சந்திரனுக்கு இரண்டாவது மனைவியாக சென்றுள்ளாரா? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வந்தனர்.மணப்பெண்ணாக கல்யாணி பிரியதர்ஷன்.... ஏற்கனவே திருமணமான நடிகரை கரம்பிடித்தாரா?ஆனால் தற்போது இது குறித்த புதிய தகவல் என்னவென்றால், அந்த வீடியோ விளம்பரத் தொடருக்காக எடுக்கப்பட்ட வீடியோ என்பது தெரியவந்துள்ளது. கல்யாணி பிரியதர்ஷனுக்கு திருமணமானால் அது சந்தோஷம்தான் என்றாலும் ஏற்கனவே திருமணமான நடிகரை திருமணம் செய்து கொண்டதாக வெளிவந்த தகவல் தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அதற்கான விடை கிடைத்ததால் ரசிகர்களும் பெருமூச்சு விட்டுள்ளனர்.

MUST READ