Homeசெய்திகள்சினிமாஇனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை.... நடிகர் கமல்ஹாசனின் அதிரடி முடிவு!

இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை…. நடிகர் கமல்ஹாசனின் அதிரடி முடிவு!

-

உலகநாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் கமல்ஹாசன். தனது சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அப்பொழுதே பல விருதுகளை அள்ளி இருக்கிறார். இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை.... நடிகர் கமல்ஹாசனின் அதிரடி முடிவு!பத்து வேடங்களாக இருந்தாலும் அதை அசால்டாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். பத்ம பூஷன், பத்மஸ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் என பல்வேறு விருதுகளை அள்ளியுள்ள கமல்ஹாசன் கிட்டத்தட்ட 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பல படங்களிலும் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் நடிப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக தக் லைஃப் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன் அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அதே சமயம் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவையும் தொகுத்து வழங்கினார். அதாவது இதுவரை 7 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இந்த ஏழு சீசன்களையும் தொகுத்து வழங்கினார் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சி பலரின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது. சீரியல்களை விட இந்த நிகழ்ச்சிக்கு தான் டிஆர்பி அதிகம் ஏறும். இனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை.... நடிகர் கமல்ஹாசனின் அதிரடி முடிவு!இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் திடீரென இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதாவது சினிமாவில் பல படங்களில் கமிட்டாகி இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசனை தான் தொகுத்து வழங்க முடியாது என்று அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார் கமல்ஹாசன். இந்த தகவல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் கமல்ஹாசனுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை வேறு யார் தொகுத்து வழங்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

MUST READ