spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜூனியர் பாலையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

ஜூனியர் பாலையா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

-

- Advertisement -
கரகாட்டக்காரன் திரைப்படப்புகழ், பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன் இவர். எனவே ஜூனியர் பாலையா என அப்போதிருந்தே அழைக்கப்பட்டார். இவருக்கு வயது 70. இவரது இயர்பெயர் ரகு பாலையா. கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜூனியர் பாலையா, கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை, வின்னர், கும்கி உள்பட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
தனி ஒருவன், புலி உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். சாட்டை (2012) இல் ஒரு தலைமை ஆசிரியராக நடித்ததற்காக அவர் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்தார். உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் மகனான ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தையைப் போலவே நாடக மேடைகளில் தன் கலையைத் தொடங்கி திரையில் வலம் வந்தவர் இன்று மறைந்து விட்டார். அவருக்கு என் அஞ்சலி குறிப்பிட்டுள்ளார்.

MUST READ