Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' - ஓடிடி உரிமை இவ்வளவு விலையா?

‘இந்தியன் 2’ – ஓடிடி உரிமை இவ்வளவு விலையா?

-

- Advertisement -
பிரம்மாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால், சித்தார்த், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் இந்தியன் 2. படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு இந்தியன் 2 வெளியாக இருக்கிறது.

77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியன் 2 ஸ்பெஷல் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தியன் முதல் பாகத்தில் கமல் நேதாஜி சந்திர போஸ் கெட்டப்பில் இருப்பது போன்று காணப்பட்டார். கடந்த 1996 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 17 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

 

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தின் உரிமையை கைப்பற்றி உள்ளதாக அறிவித்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் உரிமையை மட்டும் 200 கோடி ரூபாய்க்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெட்பிளிக்ஸ் வாங்கிய படங்களில் இந்தியன் 2 படத்தின் விலை தான் அதிகம் என்று தெரிகிறது.

MUST READ