சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
உலகநாயகன் என்று கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதே சமயம் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படமானது 2025 ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், அன்பறிவ் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் ஏஐ படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த கமல் தற்போது சென்னை திரும்பியுள்ளார். அதன்படி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய கமல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வருகிறது என சொன்னார். அடுத்தது கமலிடம், விக்ரம் 2 படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “நான் வேற ஸ்கிரிப்ட் எழுதிட்டு வந்து இருக்கேன்” என்று பதிலளித்துள்ளார். எனவே இது என்ன படமாக இருக்கும்? என்று ரசிகர்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர்.