spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினிக்கு வில்லனாக நடிக்க இருந்த கமல்ஹாசன்..... எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருந்த கமல்ஹாசன்….. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக இருந்து வருபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ஆரம்ப காலகட்டத்தில் இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருந்த கமல்ஹாசன்..... எந்த படத்தில் தெரியுமா?பின்னர் இருவரும் தனித்தனியே உச்ச நட்சத்திரங்களாக மாறிவிட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்தால் மாஸாக இருக்கும் என்று பல ஆண்டுகளாகவே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் இயக்கிய 2.O படத்தில் ரஜினியை ஹீரோவாகவும், கமலை வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார். 2.O படமானது கிட்டத்தட்ட 800 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தில், செல்போன் கதிர்வீச்சிலிருந்து பறவைகளை காக்க போராடும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் “பக்சி ராஜன்” கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவர் அந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தாலும் கூட கமல்ஹாசன் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நிச்சயம் வேற லெவலில் திரையரங்குகளை அதிர வைத்திருப்பார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

we-r-hiring

மேலும் கமல்ஹாசன் ஏற்கனவே ஆளவந்தான், தசாவதாரம் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898AD படத்தில் வில்லனாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ