Homeசெய்திகள்சினிமாஜப்பானில் ஒசாகா திரைப்பட விழா... 8 விருதுகளை அள்ளிய விக்ரம் படம்...

ஜப்பானில் ஒசாகா திரைப்பட விழா… 8 விருதுகளை அள்ளிய விக்ரம் படம்…

-

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சுமார் 8 விருதுகளை வென்றுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விக்ரம். இது 1986-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. இத்திரைப்படத்தை கோலிவுட்டின் சென்சேசனல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். ராஜ்கமல் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்தது. படத்திற்கு பிரபல ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் காளிதாஸ் ஜெயராம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஷிவானி நாராயணன், காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வௌியாகி ஏகபோர வரவேற்பை பெற்றதோடு சுமார் 600 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. இத்திரைப்படம் மட்டுமன்றி, படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தன.

இந்நிலையில், ஜப்பானில் நடைபெற்ற ஒசாகா திரைப்பட விழாவில் விக்ரம் திரைப்படம் விருதுகளை அள்ளிக்குவித்தன. ஜப்பானில் வெளியாகும் தமிழ் படங்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஒசாகா திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு நடைபெற்ற விழாவில், சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், படம் என சுமார் 8 பிரிவுகளில் விக்ரம் திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

MUST READ