spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகேப்டன் விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

-

- Advertisement -
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு உள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் நிறுவருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார்.

 

we-r-hiring
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த், உடல்நிலை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகி்ச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில், அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, சுவாசிக்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால், அவருக்கு செயற்கை சுவாசமும் அளிக்கப்பட்டது. இருப்பினும் பலன் இல்லாம்ல அவர் நேற்று காலை 6 மணிக்கு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தொண்டர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்களை தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையிலிருந்து கொண்டுவரப்பட்ட உடல் அவரது வீட்டில் வைப்பட்டு நேற்று மதியம், தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு உறவினர்கள், திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்

 

இந்நிலையில், இன்று காலை விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்திலிருந்து, சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, பொதுமக்களும், தொண்டர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.

MUST READ