Homeசெய்திகள்சினிமாகுத்து பாட்டுக்கு நடனமாடும் கமல், சிம்பு..... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தக் லைஃப்' அப்டேட்!

குத்து பாட்டுக்கு நடனமாடும் கமல், சிம்பு….. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘தக் லைஃப்’ அப்டேட்!

-

கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987இல் வெளியான நாயகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். குத்து பாட்டுக்கு நடனமாடும் கமல், சிம்பு..... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தக் லைஃப்' அப்டேட்!இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கமல், மணிரத்னம் கூட்டணி புதிய படத்திற்காக இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசன் உடன் இணைந்து அபிராமி, நாசர், சிம்பு, அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். கமல்ஹாசனின் 234 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு ராஜஸ்தான், புது டெல்லி, சென்னை போன்ற பல இடங்களில் பல கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிகர் சிம்பு நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது மாஸான ஆக்சன் நிறைந்த கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி வருகிறது. குத்து பாட்டுக்கு நடனமாடும் கமல், சிம்பு..... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'தக் லைஃப்' அப்டேட்!இந்த படத்தை பட குழுவினர் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதேசமயம் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட் வரும் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும், சிம்புவும் இணைந்து நடனமாடும் குத்து பாடல் ஒன்று இருக்கிறதாம். இருவரும் இணைந்து நடனமாடுவது படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ