spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூப்பர் ஸ்டாரை வாழ்த்திய உலகநாயகன்..... எதற்காக தெரியுமா?

சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய உலகநாயகன்….. எதற்காக தெரியுமா?

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவிலும் அனிருத் இசையிலும், இப்படம் உருவாக்கியுள்ளது. ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி விநாயகன் யோகி பாபு உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிலை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவான படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

we-r-hiring

பான் இந்தியா திரைப்படமாக இப்படம் கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. முதல் நாளை உலகம் முழுவதும் 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது வெளியான 4 நாட்களில் 300 கோடிக்கு மேலாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது அந்த வகையில், உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கும் செல்போனில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

1970 காலகட்டங்களில் இருந்தே ரஜினியும், கமல்ஹாசனும் ஒரே சமயத்தில் திரைத்துறையில் வளர்ந்து வந்தவர்கள். தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வரும் இவர்கள் இருவரும் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள். அன்று முதல் இன்று வரை இருவரும் மிகப்பெரிய ஸ்டார் ஆக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர். இதற்கிடையில் ரஜினி ரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் போட்டிகள் நிகழ்ந்தாலும் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை தற்போது வரை நிருபித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது ஜெயிலர் படத்திற்காக ரஜினியை கமல் வாழ்த்திய செய்தி இரு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ