spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத்..... வாழ்த்திய கமல்ஹாசன்!

தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத்….. வாழ்த்திய கமல்ஹாசன்!

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன், தேசிய விருது பெற்றமைக்காக தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்தியுள்ளார்.

இந்திய அளவில் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 69 வது தேசிய விருதுகள் நேற்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூரால் அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

அதில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளின் அடிப்படையில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு புஷ்பா படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.  அதனால் தேவி ஸ்ரீ பிரசாத்தை, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசைக்கான தேசிய விருது பெற்றுள்ள அன்பு இளவல் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ