- Advertisement -
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4-ம் பாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வௌியானது. மேலும், படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அமர்க்களம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இன்று இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகங்கள் கொண்டு சினிமாவில் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து 2007-ம் ஆண்டு முனி என்ற பேய் படத்தை இயக்கி நடித்தார் ராகவா லாரன்ஸ். இப்படம் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றதோடு, லாரன்ஸின் திரை வாழ்வில் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது.


முதல் பாகக்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து முனி இரண்டாம் பாகத்தை காஞ்சனா என்ற பெயரில் இயக்கினார். கடந்த 2011-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் லட்சுமி ராய், தேவதர்ஷினி, கோவை சரளா, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு காஞ்சனா படத்தின் 2-ம் பாகம் வௌியானது. இதில் டாப்ஸி மற்றும் நித்யா மேனன், மயில்சாமி ஆகியோர் நடித்திருந்தனர்.



