Homeசெய்திகள்சினிமாபடப்பிடிப்பு தொடங்கும் முன்பே 'தளபதி 68' படத்தை பாராட்டி தள்ளிய கங்கை அமரன்!

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ‘தளபதி 68’ படத்தை பாராட்டி தள்ளிய கங்கை அமரன்!

-

இளையராஜாவின் சகோதரரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தந்தையுமான கங்கை அமரன் தளபதி 68 படம் குறித்து பாராட்டியுள்ளார்.

விஜய் நடிப்பில் தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படம் அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் ரிலீஸ் பிறகு இதன் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன், ” தளபதி 68 படம் குறித்து வெங்கட் பிரபு கூறிய போது நான் அதிர்ச்சியாகி விட்டேன். அந்த அளவிற்கு மிகப்பெரிய படமாக உருவாக்க போகிறது. விஜயும் தளபதி 68 கதை கேட்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். நிச்சயமாக இது பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். 3 முதல் 4 பாடல்கள் படத்தில் இருக்கிறது. மேலும் படத்தில் நடிக்க உள்ள நடிகர்களின் தேர்வு மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே விஜய்யின் லியோ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதோடு விஜய் அரசியலில் வெற்றியாக இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. இச்சமயத்தில் கங்கை அமரன் கொடுத்த இந்த அப்டேட் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

MUST READ