நடிகை கங்கனா மீது தேர்தல் ஆணையத்தில் புகார்….
- Advertisement -

பாலிவுட்டில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். நடிப்பு ரீதியாக மட்டுமன்றி பல சமூக பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். அதேபோல, விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அண்மையில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. பிவாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி பாகம் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதனிடையே, இந்தியில் கங்கனா விமானப் படை அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம் தேஜஸ். சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடித்த இத்திரைப்படம் கடந்த அக்போடர் மாதம் வெளியானது.இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2016-ம் ஆண்டு இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக போர் விமானங்களை இயக்குவதற்கு 3 பெண் விமானிகள் நியமிக்கப்பட்டனர். இந்த சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து இத்திரைப்படம் உருவானது.

இந்நிலையில், ஐவஹர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேருவை அவமதிக்கும் வகையில் பேசியதாக கங்கனா ரணாவத் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளர் கங்கனா, மோதிலால் நேரு வாழ்ந்தபோது அவர் தான் அம்பானி, ஆங்கிலேயருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.