- Advertisement -
பாபி சிம்ஹா நடிக்கும் ராசாக்கர் படத்தின் நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்டார்.
தமிழில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த பெருமை நடிகர் பாபி சிம்ஹாவுக்கு உண்டு. அதுமட்டுமன்றி நடிப்பை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர் இந்திய அரசின் உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருதை வென்றார். பீட்சா மற்றும் காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதைத் தொடர்ந்து சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். ஜிகர்தண்டா படத்தில் நடித்ததற்காக தான் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
