spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகங்கனா நடித்துள்ள எமர்ஜென்சி... ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு....

கங்கனா நடித்துள்ள எமர்ஜென்சி… ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு….

-

- Advertisement -
கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

பாலிவுட்டில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். நடிப்பு ரீதியாக மட்டுமன்றி பல சமூக பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். அதேபோல, விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். அண்மையில் தமிழில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. பிவாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி பாகம் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இதனிடையே, இந்தியில் கங்கனா விமானப் படை அதிகாரியாக நடித்திருந்த திரைப்படம் தேஜஸ்.

we-r-hiring
இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே, கங்கனா ரணாவத் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்தியாவில் 1975-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் எமர்ஜென்சி. இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.

இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்துள்ளது. ஜூன் 14-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. பாஜக வேட்பாளராக கங்கனா ரணாவத் போட்டியிடுவதால், படத்தின் பணிகள் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படுமாம்.

MUST READ