spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கிய சூர்யாவின் கங்குவா!

இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கிய சூர்யாவின் கங்குவா!

-

- Advertisement -

சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படம் 3D அனிமேஷனில் ஒரு வரலாற்று சரித்திர திரைப்படமாக தயாராகி வருகிறது. சூர்யாவின் கரியரில் மிகவும் முக்கியமான படமாக கருதப்படும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில்வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் ராஜமுந்திரில் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து தற்போது இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து காட்டுப் பகுதியில் நடைபெற இருக்கின்றது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாகவும் 25 நாட்கள் இடைவிடாத படப்பிடிப்புகள் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால் விரைவில் கங்குவார் படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ