பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் கங்குவா. இந்தப் படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க, பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து திஷா பதானி, நட்டி நட்ராஜ், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.
சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக செய்திகள் வெளியானது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்த்தனர். அதே சமயம் கிளிம்ஸ் வீடியோவும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் இந்த படம் பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த வகையில் இந்த படம் 2024 ஏப்ரலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் பிறகு படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தாமதமாகி வருவதால் படத்தின் ரிலீஸை செப்டம்பருக்கு ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் சம்பந்தமான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி கங்குவா படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் ஆகஸ்ட் 15 இல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 படத்திற்கு போட்டியாக கங்குவா படம் களமிறங்க தயாராகி வருகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -