நடிகை அனுஷ்காவின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தெலுங்கு சினிமாவின் மூலம் அறியப்பட்டவர் நடிகை அனுஷ்கா. இவர், கடந்த 2006 இல் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதைத் தொடர்ந்து ரஜினி, சூர்யா, விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். அந்த வகையில் சிங்கம், என்னை அறிந்தால், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன.
அதேசமயம் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி படத்தில் தேவசேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமில்லாமல் நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவி, அருந்ததி உள்ளிட்ட படங்களுக்காக விருதுகளையும் வென்றுள்ளார். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல வசூலை பெற்று தந்தது. இந்நிலையில் அனுஷ்கா நடிக்கும் 50 வது படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி கடந்த 2011 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான வானம் படத்தின் இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்புவின் வானம் படத்தில் நடிகை அனுஷ்காவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -