கங்குவா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூர்யாவின் 42வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். வெற்றி பழனிசாமி இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, பாபி தியோல், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக தோன்ற இருக்கிறார். ஏற்கனவே 3D தொழில்நுட்பத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் கங்குவா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக களமிறங்கி இருப்பது எதிர்பார்ப்பு எக்கசக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. அதேசமயம் படக்குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களையும் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கங்குவா படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கங்குவா படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதனை பட குழுவினர் மாஸான புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.