Homeசெய்திகள்சினிமாவெற்றிக் கொண்டாட்டத்தில் 'பேச்சி' படக்குழு!

வெற்றிக் கொண்டாட்டத்தில் ‘பேச்சி’ படக்குழு!

-

நடிகை காயத்ரி சங்கர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், விக்ரம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ரசிகர்களின் பேராதரவை பெறும் 'பேச்சி'..... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!அதேபோல் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் குட்டிப்புலி, வேதாளம், அயலான் போன்ற பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.வெற்றிக் கொண்டாட்டத்தில் 'பேச்சி' படக்குழு!

இந்நிலையில் காயத்ரி சங்கர், பால சரவணன் ஆகிய இருவரும் இணைந்து பேச்சி எனும் ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ராமச்சந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ராஜேஷ் முருகன் இந்த படத்திற்கு இசையமைக்க பார்த்திபன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.வெற்றிக் கொண்டாட்டத்தில் 'பேச்சி' படக்குழு! இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி நாளுக்கு நாள் இப்படத்தின் வசூலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பேச்சி படக்குழுவினர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.வெற்றிக் கொண்டாட்டத்தில் 'பேச்சி' படக்குழு! அந்த விழாவில் பால சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட படத்திற்கு பேராதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் படத்தின் வெற்றியை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ