சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் 8000 திரைகளில் திரையிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் நடித்துள்ள திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவின் 42 வது படமான இந்த படத்தை சிறுத்தை சிவா மிகவும் பிரம்மாண்டமாக இயக்கியிருக்கிறார். படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகியிருக்கிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், பாபி தியோல், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில் நடிகர் கார்த்தி வில்லனாக நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவருடைய காட்சிகள் படத்தின் கிளைமாக்ஸ் -இல் இடம்பெறும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் கங்குவா திரைப்படம், வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.
ஆனால் கடும் போட்டியின் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் வருகின்ற நவம்பர் மாதம் 13 அல்லது நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா திரைப்படம் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (செப்டம்பர் 19) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கும் இப்பத்தினை கிட்டத்தட்ட 8000 திரையரங்குகளில் வெளியிட முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.