பேச்சி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியிருந்த பேச்சி திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், விக்ரம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்த காயத்ரி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருடன் இணைந்து நகைச்சுவை நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தினை ராமச்சந்திரன் எழுதி இயக்கியிருந்தார். ராஜேஷ் முருகன் இந்த படத்திற்கு இசையமைக்க பார்த்திபன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்திருந்தார். இந்தப் படத்தினை வெயிலோன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் வெருஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது.
இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் வெற்றி நடை போட்டது. நாளுக்கு நாள் இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு பெருக தொடங்கியது. பலரும் இத்திரைப்படத்தை பாராட்டி வந்தனர். மொத்தத்தில் ஹாரர் திரில்லர் விரும்பிகளுக்கு இந்த படம் நல்ல விருந்து படைத்தது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளங்களில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.