நடிகர் தர்ஷனுக்கு மனநல பாதிப்பு… மருத்துவர்கள் தகவல்…
- Advertisement -
பெங்களூரு நகரில் கடந்த 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 நபர்கள் கைது செய்யப்பட்டு தற்பொழுது போலீஸ் காவலில் உள்ளனர். 13 நபர்களையும் போலீசார் கொலை நடந்ததாக கூறப்படும் பட்டனகரே என்ற பகுதியில் உள்ள கார் செட்டிற்கு அழைத்து சென்று சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடிகர் தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் என்பவர் தர்ஷனுக்கு சொந்தமான பெங்களூரூ பண்ணையில் தற்கொலை செய்து கொண்டார். தனிமையில் இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவர் வீடியோ ஒன்றில் தெரிவித்தார். இருப்பினும், அவருக்கும் ரேணுகாசாமியின் தற்கொலைக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். சிறிய விஷயங்களில் கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்றும், படப்பிடிப்பு தளங்களில் பலருடன் சண்டை போடக்கூடியவர் என்றும் சினிமா வட்டாரத்தினரும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.