spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபான் இந்தியா ஹிட் காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட்!

பான் இந்தியா ஹிட் காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

காந்தாரா 2 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னட சினிமாவிலிருந்து கடந்த ஆண்டு வெளியாகி இந்தியா முழுவதும் பேசும் பொருளான படம் தான் காந்தாரா.
கே ஜி எஃப் 1, கேஜிஎப் 2 படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் காந்தாரா படம் வெளியானது.
சுமார் 15 கோடியில் எடுக்கப்பட்ட இப்படமானது இந்தியா முழுவதும் 400 கோடியை வசூல் செய்தது.
மிகக் குறைவான பொருட்செலவில் எடுக்கப்பட்டு அதிகமான லாபம் கொடுத்த படங்களில் இப்படம் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
வெறும் கமர்சியல் படமாக மட்டுமின்றி மண் மற்றும் மக்களின் சமய நம்பிக்கையை பேசும் கதையை கையில் எடுத்து அதனை படமாக இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி.
இப்படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

we-r-hiring

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இப்ப படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப் போவதாகவும் இந்த இந்தப் படத்திலும் ரிஷப் ஷெட்டியே இயக்கி நடிக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

மேலும் இது காந்தாரா முதல் பாகத்தின் தொடர்கதையாக இல்லாமல் கதைக்கு முன்னர் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு முன் கதையாக உருவாக உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

MUST READ