Homeசெய்திகள்சினிமாமீண்டும் கார்த்தியுடன் நடிக்கும் ராஜ்கிரண்!

மீண்டும் கார்த்தியுடன் நடிக்கும் ராஜ்கிரண்!

-

பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கார்த்தி ஜப்பான்
திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து கார்த்தி தனது 26வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனை சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை க்ரித்தி செட்டி நடிக்கிறார். இப்படம் ஒரு மசாலா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் நடிகர் ராஜ்கிரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ராஜ்கிரண் ஏற்கனவே கார்த்தி, உடன் கொம்பன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக கார்த்தியின் 26வது படத்தில் ராஜ்கிரண் இணைந்துள்ளார்.

MUST READ