நடிகர் சூர்யா, பிரபல நடிகர் சிவகுமாரின் மகனாக திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தாலும் தனது கடின உழைப்பினால் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். அந்த வகையில் நடிப்பின் நாயகன் என்று பலராலும் கொண்டாடப்படுகிறார் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் 2024 ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூர்யா இன்று (ஜூலை 23) தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் சூர்யாவிற்கு ரசிகர்களும் திரைப்படங்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy birthday to the man who taught me that even if u start from zero anything could be learnt and achieved through commitment and hard work. Loads and loads of love to the anbana fans who are spreading so much love in the society. 🤗@Suriya_offl #HappyBirthdaySuriya pic.twitter.com/b1fH37qQtv
— Karthi (@Karthi_Offl) July 23, 2024
இந்நிலையில் அவருடைய உடன் பிறந்த தம்பி நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது அண்ணன் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கினாலும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் எதையும் கற்றுக்கொண்டு சாதிக்க முடியும் என்பதை கற்றுத்தந்த மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். சமூகத்தில் அன்பை பரப்பும் அன்பான ரசிகர்களுக்கும் என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.