Homeசெய்திகள்சினிமாகார்த்தி நடிக்கும் வா வாத்தியார்... இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டம்...

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார்… இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டம்…

-

- Advertisement -
kadalkanni
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் வா வாத்தியார் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

 

கார்த்தி நடித்த 25-வது திரைப்படம் ஜப்பான். இது கார்த்தியின் 25-வது படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகம் இருந்தது. ஆனால் படம் வெளியாகி பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. வசூல் ரீதியாகவும் படம் வெற்றிபெறவில்லை. இதைத் தொடர்ந்து கார்த்தி நடிக்கும் 27-வது படத்தை பிரேம்குமார் இயக்கி வருகிறார். இவர் 96 படத்தை இயக்கி புகழ்பெற்றவர் ஆவார். இப்படத்திற்கு மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

மேலும் கார்த்தி நடிக்கும் 26-வது படத்தின் அப்டேட்டும் வெளியானது. அதன்படி இப்படத்தை நலன் குமாரசாமி இப்படத்தை இயக்குகிறார். வா வாத்தியார் என்று இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசை அமைக்கிறார். படத்தில் தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், ஜி.எம்.குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் வா வாத்தியார் படம் குறித்த படப்பிடிப்பு அப்டேட் வெளியாகி இருக்கிறது.அதன்படி, இம்மாத இறுதிக்குள் படப்பிடிப்பு நிறைவு பெற்றுவிடும் என்றும், அடுத்த மாதத்தில் சர்தார் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் கார்த்தி பங்கேற்பார் என்றும் தகவல் வெளிாகி உள்ளது.

MUST READ