- Advertisement -
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தின் ஓ டி டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்யா, சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்‘ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதில் ஆர்யாவுடன் இணைந்து, பிரபு சித்தி இத்னானி, பாக்கியராஜ், ஆடுகளம் நரேஷ், தீபா, சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இவர் குட்டி புலி, கொம்பன், விரும்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் ட்ரம் ஸ்டிக் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இதற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
கடந்த ஜூன் 2ஆம் தேதி வெளியான இப்படம் ஜீ5 என்ற ஓ டி டி தளத்தில் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
