Homeசெய்திகள்மற்றுமொரு முத்தையா படம்… காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம்!

மற்றுமொரு முத்தையா படம்… காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம்!

-

நடிகர் ஆர்யா, ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றிக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபு , சித்தி இத்னானி, பாக்கியராஜ் இயக்குனர் தமிழ் ஆடுகளம் நரேஷ், தீபா, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இவர் குட்டிப் புலி, கொம்பன், விருமன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

ஜி ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் கதையானது, தமிழ்ச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தி இத்னானியை சுற்றி நடக்கிறது. தன் அம்மா, அப்பா தன்னை வளர்த்த மாமா மூவரையும் இழந்து விடும் சித்தி இத்னானி, தன் அண்ணனின் மூன்று மகள்களையும் தனி ஆளாக வளர்த்து வருகிறார்.
இதற்கிடையில் இவரின் சொந்தக்காரர்கள் சொத்துக்களை கைப்பற்றும் நோக்கத்தில் முறை பையன்களுக்கு சித்தி இத்னானியை திருமணம் முடித்துக் கொடுக்க திட்டமிடுகின்றனர்.

இத்திட்டத்தை காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்யா தடுத்து நிறுத்துகிறார். இதில் ஆர்யாவிற்கும் சித்தி இக்னானிக்கும் இடையேயான தொடர்பு என்ன? என்பதை கூறுவதே மீதமுள்ள கதை ஆகும்.

இந்த படத்தில் ஆர்யா கிராமத்து ஆக்சன் ஹீரோவாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
முத்தையா படத்தின் வழக்கமான கிராமத்து ஹீரோயின்களை போல் சித்தி இத்னானி நடித்துள்ளார். பின் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் பிரபு, கம்பீரமான இஸ்லாமிய சமூகத்தின் தலைவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் இயக்குனர் தமிழ் மற்றும் ஆடுகளம் நரேஷ் வில்லன்களாக சிறந்த சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர். பாக்யராஜ், தீபா, சிங்கம் புலி உள்ளிட்டோரும் அவரவர் கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளனர்.

இக்கதையின் முதல் பாதியில் அளவுக்கதிகமான சண்டைக் காட்சி தான் சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சிகளுடன் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. இறுதியில் ஆர்யாவிற்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்கும் இடையேயான பிணைப்பை எடுத்துக் கூறியுள்ளது.

ஜிவி பிரகாஷின் இசையமைப்பு வழக்கம் போல் நன்றாகவே அமைந்துள்ளது.

MUST READ