நடிகர் கதிர், கடந்த 2013 ஆம் ஆண்டு மதயானை கூட்டம் என்ற படத்தில் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். அதைத்தொடர்ந்து கிருமி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் நடித்து பெயர் பெற்றார்.
அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் இவர் சுழல் எனும் வெப் சீரிஸில் நடித்திருந்த நிலையில் அடுத்ததாக சுழல் 2 என்ற தொடர் அமேசான் ப்ரைமில் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் கதிர், மாணவன் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை எஸ் எல் எஸ் ஹென்றி என்பவர் எழுதிய இயக்க ஜிப்ரான் இதற்கு இசையமைத்துள்ளார். மேலும் படத்தை பார்ச்சூன் ஸ்டுடியோஸ் மற்றும் எமினன்ட் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.
A cheerful track of love is all set to capture your hearts! 💝🎶#Kolluraale – the 1st single from #Maanavan ✊ is releasing tomorrow at 4:30PM.
A @GhibranVaibodha musical🎺@am_kathir @Suryakumar_1996 @karu_palaniappan @Actor_Mahendran #Yuvalatchumi @monishablessyb pic.twitter.com/YA4zJID4cq
— Fortunee Studios (@FortuneeStudio) March 21, 2024
அதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் கொல்லுராளே என்னும் முதல் பாடல் இன்று மாலை 4.30 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்தப் படம் 2024 ஆம் ஆண்டில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


