spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரிலீஸுக்கு தயாராகும் கவினின் 'மாஸ்க்'.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ரிலீஸுக்கு தயாராகும் கவினின் ‘மாஸ்க்’…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

-

- Advertisement -

கவின் நடிக்கும் மாஸ்க் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.ரிலீஸுக்கு தயாராகும் கவினின் 'மாஸ்க்'.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘கிஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது தவிர நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கவின். மேலும் ‘கவின் 09’ எனும் படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவாகும் மாஸ்க் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விக்ரணன் அசோக் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க, ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரிலீஸுக்கு தயாராகும் கவினின் 'மாஸ்க்'.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!கடந்த பல மாதங்களுக்கு முன்னரே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஒரே ஒரு பாடல் காட்சியைத் தவிர மற்ற காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இதன் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகும் எனவும், ட்ரைலரை பார்த்த சிலர் அதனை பாராட்டி வருகின்றனர் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது கவினுக்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என  நம்பப்படுகிறது.

MUST READ