spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாயுவனின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான கவின் நடிக்கும் 'ஸ்டார்' பட ப்ரோமோ!

யுவனின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ பட ப்ரோமோ!

-

- Advertisement -

கவின் நடித்து வரும் ஸ்டார் படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு கவின் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் எழுதி, இயக்கும் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.கே எழிலரசு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

we-r-hiring

சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதனை யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோவை நடிகர் கவின் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

MUST READ