கவின், நெல்சன் திலீப்குமார் கூட்டணி வைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது .
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் கவின். அவரது நடிப்பில் வெளியாகி வரும் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே அடுத்தடுத்த படங்களுக்கு கதை தேர்வு செய்வதில் மிகவும் நிதானமாக செயல்பட்டு வருகிறார் அவர்.

தற்போது இளன் மற்றும் சதீஷ் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆம், ஜெயிலர் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றி கொடுத்த இயக்குனர் நெல்சன் தான். அவர் புதியதாக தயாரிக்க இருக்கும் படத்தில் கவின் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை நெல்சனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய சிவா என்பவர் இயக்க இருக்கிறார். கவின் மற்றும் நெல்சன் இருவரும் நீண்ட காலமாக நண்பர்கள் என்பது நமக்கு தெரியும். எனவே இருவரும் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் கைகொடுக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்குகின்றனர்.
படத்திற்கான வேலைகள் தொடங்கி விட்டதாகவும் நெல்சன் அலுவலகத்திலேதயாரிப்பு பணிகள் நடைபெற்ற வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.